கலெக்டர் அறிவுறுத்தல் கூவி கூவி விற்கப்படும் நாக்பூர் ஆரஞ்சு பெரம்பலூர் மாவட்டத்தில் 27ம்தேதி தேசிய திறனாய்வு தேர்வு 1,043 பேர் எழுதுகின்றனர்

பெரம்பலூர், டிச.24: பெரம்ப லூர் மாவட்டத்தில் வரும் 27ம்தெதி 11மையங்களில் தேசியத் திறனாய்வுத் தேர்வு நடக்கிறது. இதில் 1,043 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் அரசு, ஆதிதிராவிடர், அரசு நிதியுதவி மற்றும் தனியார் உயர்நி லை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்து வகைப் பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தேசியத் திறனாய்வுத் தேர்வு வரும் 27ம்தேதி நடத்தப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேசியத் திறனாய்வுத் தேர்வினை வரும் 27ம்தேதி (ஞா யிற்றுக்கிழமை) பெரம்பலூர், குரும்பலூர், வேப்பந்தட் டை, அரும்பாவூர், லெப்பை க்குடிகாடு, குன்னம் (பெ), குன்னம் (ஆ), பாடாலூர் (மாதிரி) செட்டிக்குளம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள், பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 11மையங்க ளில் மொத்தம் 1,043 மாண வ, மாணவியர் எழுத உள்ளனர். முதல் கட்டமாக மாவ ட்ட அளவில் நடத்தப்படும் இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் பின்னர் தேதி குறிப்பிடப்பட்டு, 2ம்கட்டமா க மாநில அளவில் நடத்தப் படும் தேசிய திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவர். அதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என கல் வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: