ஆர்டிஓ அதிரடி நீதிமன்ற நடவடிக்கை முடியும் வரை ஊராட்சி பணிகளுக்கு அனுமதிக்க கூடாது

நாகை,டிச.24: நீதிமன்ற நடவடிக்கை முடியும் வரை ஊராட்சி பணிகளுக்கு அனுமதிக்க கூடாது என்று நாகை கூடுதல் கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை அருகே குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளை சேர்ந்த 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து குத்தாலம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்பதை ஏற்படுத்தியுள்ளனர். அந்த கூட்டமைப்பின் சார்பாக நாகை கூடுதல் கலெக்டர் பிரசாந்திடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளது.

இந்த ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட நிதியிலிருந்து நிறைவேற்றப்படும் சாலை அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுதல், பள்ளி சுற்றுசுவர் அமைத்தல், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் ஊராட்சி மன்றத்தலைவரின் அனுமதியில்லாமல் பஞ்சாயத்து சட்ட விதிகள் மற்றும் கலெக்டரின் உத்தரவுகளுக்கு புறம்பாக அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைக்கு இடைக்கால தடை ஆணை பிறப்பிக்க கோரி குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் மயிலாடுதுறை நீதி மன்றத்தில் டிசம்பர் மாதம் 22ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே நீதிமன்ற நடவடிக்கை முடியும் வரை பணிகள் நடைபெற அனுமதி அளிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>