×

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சமையல் செய்து காத்திருப்பு போராட்டம்

 

வடலூர்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும்

இத்திட்டத்தின் முகாம்களில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும், வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.

பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும் குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் முற்றாக கைவிட வேண்டும்.

வருவாய்த் துறையில் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் நில அளவை துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும் வெளி முகமை ஒப்பந்த, தற்காலிக, மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும்,அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ம் நாளை வருவாய் துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் என உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் பார்த்திபன், வட்டத்துணை ஆய்வாளர் ராஜ மகேந்திரன்,தமிழ்நாடு கிராம ஊழியர் சங்க வட்ட செயலாளர் ஞானவேல்,பெரா கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் கந்தன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள்,அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Federation of Revenue Associations ,Keranjipadi Regional Office ,Vadalur ,Tamil Nadu Rural Administrative Officers Association District ,Viswanathan ,Keranjipadi District Office ,Stalin ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!