×

செந்தில்பாலாஜி பேச்சு தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் ஜன.31க்குள் ெசலுத்த வேண்டும்

கரூர், டிச. 24: கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972ன்படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தொழிலாளர் நலநிதிச் சட்டம் 1972 பிரிவு 2(டி)ன்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ. 10, ஒவ்வொரு தொழிலாளிக்கு வேலையளிப்பவர் பங்காக ரூ. 20ம் சேர்த்து மொத்தம் ரூ. 30வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2020ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 2021ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணையவழியில் செலுத்துவதற்கு வசதியாக புதிதாக இணையதளம் www.iwb.tn.gov.in ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை, நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக, The Secretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600 006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாகவோ, ஜனவரி 31ம்தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Senthilpology Talk Companies ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...