×

கலெக்டர் திடீர் ஆய்வு நிலமதிப்பீடு தயார்செய்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவு

குளித்தலை, டிச.24: கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணாநகர் உழவர் சந்தையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள புறவழிச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி குளித்தலை திமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் சப்.கலெக்டர் சேக் அப்துல்ரகுமான் இடம் கடந்த மாதம் நவம்பர் 28ம் தேதி கோரிக்கை மனு அளித்தார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது குளித்தலை நகரத்தில் அண்ணாநகரில் புறவழிச்சாலை அவர் கடந்த 40 வருடமாக இருந்து வந்த நிலையில் கடந்த நாலு வருடத்திற்கு முன்பு நீதிமன்றம் மூலம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு பகுதியை திடீரென்று அடைக்கப்பட்டது.

மேலும் குளித்தலை உரிமையல் நீதிமன்ற உத்தரவுபடி எடுக்கப்பட்டு உள்ள இடம் 8 சென்ட் 12 சதுரடி உள்ள இடம்தான் மேலும் சுவாதீனம் பெற்ற பிறகு 3 1/2சென்ட் உள்ள இடத்தை தனியாரால் விற்பனை செய்யப்பட்டு மகாமுனி என்பவருடன் கிரையம் பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள தனியார் தரப்பில் அடைக்கப்பட்ட பாதையில் பாதி பகுதியை விட்டு விட்டதால் அவர்கள் அனுபவித்துவருகிறார்கள்.வைகநல்லூர் வடக்கு கிராம நஞ்சை வாய்க்கால் பாசனம் உள்ள விவசாய நிலம் ஒரு ஏக்கர் ரூ 2 லட்சத்து 68 ஆயிரம் என்று அரசு வழிகாட்டு மதிப்பு உள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தேவைப்படும் இடம்பெறும் 4 1/2சென்ட் மட்டுமே ஆகும். அதை நகராட்சி சார்பாக தேவைப்படும் இடத்திற்கு உண்டான மதிப்பை நில உரிமையாளரிடம் செலுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கலாம். மேலும் தேவைப்படும் இடத்தை நகராட்சி நிர்வாகம் நில ஆர்ஜிதம் செய்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரவேண்டும். குளித்தலை நகர பொது மக்கள் சார்பாகவும் 40ம் கிராம பொது மக்கள் சார்பாகவும் இக்கோரிக்கையை வைக்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று கலெக்டர் மலர்விழி அண்ணாநகர் புறவழி சாலையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது சப்.கலெக்டர் சேக் அப்துல் ரகுமான், நகராட்சி ஆணையர் முத்துக்குமார் மற்றும் நகர சர்வேயர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது தற்காலிக அரசு விவசாய நிலத்தின் அளவீட்டை வைத்து விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்து அதற்கான மதிப்பீடு தயாரித்து உடனே மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். அதனால் திமுகவின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைத்த திமுகவினருக்கும், கோரிக்கைக்கு ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கும் குளித்தலை நகர மற்றும் 40 கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...