×

சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.24: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதப்படுத்த அரசாணை வெளியிட வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் நடப்பாண்டிற்கான காலியிட மதிப்பீடு அறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரத்துக்கு உட்பட்டு மறு நிர்ணயம் செய்ய வேண்டும். துணை ஆட்சியர் பட்டியலை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சேலம் மாவட்ட துணைத்தலைவர் லெனின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அர்த்தனாரி, கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதில், பொருளாளர் முருகபூபதி, இணைச்செயலாளர் பிரபு, செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.



Tags : Revenue officials ,Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...