×

மருந்து நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசு புகார் 10 கிணறுகளின் நீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

சேலம், டிச.24: தலைவாசல் அருகே மருந்து தயாரிக்கும் நிறுவன கழிவால் நிலத்தடி நீர் மாசடைவதாக எழுந்த புகாரால், 10 கிணறுகளின் தண்ணீரை சேகரித்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தலைவாசல் அருகே கோலியாஸ் கிழங்கில் இருந்து, மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், அங்குள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தனர். மேலும், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த நிறுவனத்தை ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்ததும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நிபந்தனைகளுடன் அந்த நிறுவனத்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், வேளாண்மை அதிகாரிகள் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று விவசாயி நிலங்களையும், விவசாய கிணறுகளையும் ஆய்வு செய்தனர். பின்னர், 10 கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ஆய்வு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், மருந்து தயாரிக்கும் நிறுவனத்தையும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கையில், நிலத்தடி நீர் மாசடைந்து இருப்பது தெரிந்தால், மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pharmaceutical Company Collection ,wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்