×

முதியோர் உதவித்தொகை

ஓமலூர், டிச.24: ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏழை எளிய முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு, உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா ஓமலூரில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ வெற்றிவேல் கலந்து கொண்டு கிராமமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர், விதவைகளுக்கு மாத உதவிதொகைக்கான உத்தரவு வழங்கினார். 100 பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 95 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. விழாவில், ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, செயலாளர் கோவிந்தராஜ், புளியம்பட்டி தலைவர் பூரலகுட்டையார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது