ஏற்காட்டில் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும்

ஏற்காடு, டிச.24: சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிக்கர் நேற்று, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஏற்காட்டை சேர்ந்த மக்கள் எஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஏற்காட்டை சேர்ந்த இளைஞர்கள் வெளியூர்களில் இருந்து கஞ்சாவை அதிகம் கொண்டு வருவது அதிகரித்துள்ளது, இதனை தடுக்க வேண்டும், ஏற்காடு சுற்றுலா தலம் என்பதால் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், ஏற்காட்டிற்கு உள்ள கொளகூர் மற்றும் குப்பனூர் மலைப்பாதைகளில் சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மனுவை பெற்ற எஸ்.பி. தீபா கனிக்கர், மக்களிடம் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆய்வின் போது, சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>