சொத்து தகராறில் கோஷ்டி மோதல்

கிருஷ்ணகிரி, டிச.24:  கிருஷ்ணகிரி எலுமிச்சங்கிரியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி  கோவிந்தம்மாள்(50). இவருக்கும், சூளகிரி வேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  வெங்கடேசன்(45) என்பவருக்கும் சொத்து தகராறில்  நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. அப்போது, வெங்கடேசன் மற்றும்  கிருஷ்ணன்(49), கோவிந்தராஜ்(30), சின்னமணி(25) ஆகியோர்  சேர்ந்து, கோவிந்தம்மாளை தாக்கினர். இதுகுறித்து கோவிந்தம்மாள்  சூளகிரி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் தங்களை கோவிந்தம்மாள் மற்றும்  அவரது மகன்கள் தோலன்(30), குட்டியப்பன்(27) ஆகியோர் தாக்கியதாக கிருஷ்ணன்  தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், வெங்கடேசன் மற்றும்  கிருஷ்ணன், கோவிந்தராஜ் உள்பட 7பேர் மீது சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து வருகிறார்.

Related Stories:

>