×

எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.24: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 33ம் ஆண்டு நினைவு நாள், இன்று(24ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. எனவே, அதிமுக சார்பில் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் எம்ஜிஆரின் சிலை, படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MGR Memorial Day ,
× RELATED எம்ஜிஆர் நினைவு தினம்