×

வாகனங்களில் விதிமீறி பொருத்திய பம்பர்அகற்றம்

கிருஷ்ணகிரி, டிச.24: கிருஷ்ணகிரியில், போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பாக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர்கள் அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புச்செல்வன் மற்றும் மாணிக்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது: மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள புல்பார்கள் அகற்றப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இத்தணிக்கையில் புல்பார், வாகனங்களில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு ஸ்டிக்கர்கள், டூவீலர்களில் மாற்றப்பட்ட சைலன்சர் ஆகியவை அகற்றப்பட்டன. மேலும், வாகனங்களில் பிரேக் லைட், இண்டிகேட்டர் லைட், பார்க்கிங் லைட், வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவை வேலை செய்கிறதா, பதிவு எண் மோட்டார் வாகன விதிகளின்படி எழுதப்பட்டுள்ளதா என்பது குறித்து தணிக்கை செய்யப்பட்டு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இச்சோதனை தொடர்ந்து நடைபெறும். புல்பார்களை அகற்றவில்லை என்றால், கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : bumper removal ,
× RELATED பம்பர் அகற்றப்படாத டிஆர்ஓ கார் நோய்...