ஏஐடியூசி கோரைப்பாய் உற்பத்தியாளர் கூட்டம்

தர்மபுரி, டிச.24: தமிழ்நாடு ஏஐடியூசி தர்மபுரி மாவட்ட கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் சங்க கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சின்னதுரை, அப்பாதுரை, ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், கோரைப்பாய் உற்பத்தியாளர் முனாப் பாய் ஆகியோர் சங்க செயல்பாடுகள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வது குறித்து பேசினர். கூட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோரைப்பாய் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் கோரைப்பாய் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும். ஊரடங்கால் வருவாயிழந்த தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் அப்பாதுரை, பெருமாள், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிய மாவட்ட பொறுப்பாளராக சிவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: