சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.24: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய அளவில் முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் காவேரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், சேகர், மஞ்சுளா, ருத்ரையன், இளவேனில், பிரபாகரன், புகழேந்தி, லில்லிபுஷ்பம், பழனியம்மாள்  ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவுக்கு என தனி துறை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் அமைப்பாளருக்கு ₹5லட்சம், உதவியாளருக்கு ₹3லட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

>