×

தியாகி சிதம்பரநாதன் பிறந்தநாள் விழா

நாகர்கோவில், டிச.24: முன்னாள் அமைச்சர் தியாகி சிதம்பரநாதனின் பிறந்தநாள் விழா குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈத்தாமொழி சந்திப்பில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் அசோக்ராஜ், வைகுண்டதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ சிதம்பரநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகி தவசிமுத்து, ராஜபாண்டியன், டாக்டர் சிவா, சீனிவாசன், அந்தோணிமுத்து, முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiyagi Chidambaranath Birthday Celebration ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...