×

கட்டுப்பாடுகளை மீறி மார்த்தாண்டம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மார்த்தாண்டம், டிச.24: மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மிக நீளமான இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது முதல் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அதிக வேகம், கவனக்குறைவு காரணமாக இந்த விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதையடுத்து விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்க வேண்டும், மேம்பாலத்தில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென மேம்பால சாலையின் பக்க சுவரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்களின் கவனத்தை சிதறடிப்பதாக உள்ளது. தற்போது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும், தேர்தல் நெருங்குவதாலும் இதுபோல் பிற கட்சிகளை சேர்ந்தவர்களும், மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் போஸ்டர்களை ஒட்ட வாய்ப்பு உள்ளது. இது பெரும் விபத்துகளுக்கு வழி வகுக்கும். எனவே மேம்பாலத்தில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போஸ்டர்கள் ஒட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : flyover ,Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு