கிறிஸ்துவ திருச்சபைகளில் ஆராதனை நடத்த அனுமதி கோரி முற்றுகை

திருப்பூர், டிச.24: பெந்தேகோஸ்தே திருச்சபைகள் அனைத்திலும் ஆராதனை நடத்த அனுமதிக்க கோரி பெந்தேகோஸ்தே திருச்சபையினர் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். திருப்பூர் முழுவதும் பல இடங்களில் பெந்தேகோஸ்தே திருச்சபைகள் செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சபைகளில் கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஆராதனை நடத்த தடை விதிக்கப்பட்டது. தளர்வு பெருமளவு தளர்த்தப்பட்ட நிலையில் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதால் திருச்சபைகளில் ஆராதனைகளுக்கு அனுமதிக்க வேண்டும்.அனைத்து திருச்சபைகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் ரோட்டிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அகில இந்திய கிறிஸ்துவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனர் ஜோஸ்வா ஸ்டீபன், பெந்தேகோஸ்தே திருச்சபை மாமன்றத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் விக்ரமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: