குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை

திருப்பூர், டிச.24: திருப்பூர் எஸ்பி. திஷா மிட்டல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், ரவுடிகளை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யும் விதமாக எஸ்பி. திஷா மிட்டல் உத்தரவுப்படி, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ரவுடித்தனம் உட்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை, போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இதில் தனிக்கவனம் செலுத்தும் விதமாக திருப்பூர் மாவட்ட அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் உள்ள ரவுடிகள் உட்பட 24 பேரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்ெபக்டர்கள், எஸ்பி. அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம், எஸ்பி. திஷா மிட்டல் குற்ற வழக்குகளில் அடிக்கடி தொடர்புடையவர்கள் தொடர் சட்டவிரோத செயங்களில் ஈடுபட்டால் அல்லது வழக்குகளில் சம்பந்தப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் மிகக்கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>