காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

ஊட்டி, டிச.24: நீலகிரி மாவட்ட  தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம்  முன்பு பெருந்திரள் முறையீடு நடந்தது. இதில், சத்துணவு  ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு  ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9  ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது  வழங்க கூடிய ஓட்டுமொத்த தொகையினை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல்  உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். நிறுத்தி  வைக்கப்பட்டுள்ள புதிய நியமன தேர்வை உடனே நடத்தி காலி பணியிடங்களை உடனே  நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.  போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயா  தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மணி வரவேற்றார். மாவட்ட செயலாளர்  முருகன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

Related Stories:

>