தூதூர்மட்டம் பகுதியில் காணாமல் போன சிறுமியை 3வது நாளாக தேடும் பணி தீவிரம்

குன்னூர், டிச.24: குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் காணாமல் போன சிறுமியை 3வது நாளாக போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.குன்னூர் அருகேயுள்ள தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில்  பணியாற்றி வருபவர்கள் வட மாநில தொழிலாளியான லட்சுமணன் அவரது மனைவி சுமன் குமாரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி (8) என்ற சிறுமி கடந்த 21ம் தேதி விளையாட சென்றவர் இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் கொலக்கம்பை போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார், வனத்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்பிரிவினர் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த  15 வயதுடைய வட மாநில தொழிலாளியை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சிறுமியை ஓடையில் வீசியதாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஓடையில் தேடினர். ஆனால் அங்கு சிறுமி கிடைக்காததால் மீண்டும் அந்த பகுதியில் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>