×

கறம்பக்குடி அருகே பட்டா பாதையில் இறந்தவர் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கறம்பக்குடி, டிச. 23: கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஊராட்சியில் மயிலாடி தெரு கிராமத்தில் இறந்தவர்களை வழக்கம் போல் பட்டா நிலத்தில் உள்ள பாதை வழியாக உடல் எடுத்து செல்லப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அடைக்கன் ( 85) வயது மூப்பின் காரணமாக இறந்தார். வழக்கம் போல நேற்று நண்பகல் அவரை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்து செல்ல இருந்த போது பட்டா இடத்தில் இறந்தவரை எடுத்து செல்ல கூடாது என்று பட்டா இடத்திற்கு உரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இறந்தவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.தகவல் அறிந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவி, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், திருமணஞ்சேரி ஊராட்சித்தலைவர் பிரபுகாந்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒன்றிய ஆணையர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக வாய்க்கால் வரத்துகளை சரி செய்து புதிய பாதை அமைத்து தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து தற்காலிகமான மாற்று பாதையை சரி செய்து உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து போராட்டத்தை விலக்கி கொண்டனர். பின்னர் தற்காலிக மாற்று பாதையில் சென்று இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.

Tags : deceased ,road ,Karambakudy ,Patta ,
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...