சென்னை: கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், ‘அஜித் குமார் ரேஸிங் அணி’ என்ற சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்நிறுவனம் துபாய், பெல்ஜியம் உள்பட பல நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகள் வென்றது. இந்நிலையில், ஸ்பெயினில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக அஜித் குமார் ஸ்பெயின் சென்றுள்ளார்.
அவரது அணி பங்கேற்கும் பந்தயங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 28: க்ரெவென்டிக் 24H. செப்டம்பர் 30, அக்டோபர் 1: LMP3 சோதனை. அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை. அக்டோபர் 11, 12: GT4 ஐரோப்பிய தொடர் ஆகிய 4 கார் பந்தயங்களில் அஜித் குமார் தனது அணியுடன் பங்கேற்கிறார்.
