×

மணமேல்குடி பகுதியில் வேர் அழுகல் நோயால் நெற்பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

அறந்தாங்கி, டிச.23: மணல்மேல்குடி தாலுகாவில் வேல் அழுகவல் நோயால் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணமேல்குடி தாலூகா மணலூர் வட்டம், கார்க்கமலம் வட்டம், வெள்ளுர் வட்டங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இப்பகுதியில் காலம் தவறி மழை பய்ததால் பயிர்கள் காய்ந்திருந்தது தற்போது நிவர் மற்றும் புரவி புயலிகளால் அதிக மழை பெய்ததால் பயிர்கள் சூரை நோய் மற்றும் வேர் அழுகள் நோய் தாக்குதலால் நெல்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடனை எப்படி திறப்பி செலுத்துவது என்ற கவலையில் உள்ளனர். ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய உழவு கூலி, உரம், பூச்சி மருந்து என ஏக்கருக்கு 30 ஆயித்திற்கு மேல் செலவு செய்துள்ளோம், தமிழக அரசு உரிய இழப்பீடும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ்சும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Manamelkudi ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி