×

முழுமையான நெல் கொள்முதலை உறுதி செய்க: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

திருவள்ளூர்: விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டதால் மழையில் நனைந்து வீணாகும் சூழல் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனே சீர் செய்ய வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags : DTV Dinakaran ,THIRUVALLUR ,AMUGA ,GENERAL SECRETARY ,T. D. V. Dinakaran ,Kanchi ,Chengalpattu ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்