×

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் 25ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு

பெரம்பலூர், டிச.23: பெரம்பலூர் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற இருக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதியில்லை என கலெக்டர்  வெங்கடபிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித் து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசித் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு வரும் 25ம்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4மணி முதல் 8 மணி வரை நடைபெ ற உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படாமல் பாரம்பரிய முறைப்படி நடைபெறும். அதனைத் தொடர் ந்து 25ம்தேதி காலை 8மணிமுதல் மாலை 7மணி வரை கோவில் முன் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொதுமக்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

அதனடிப்படையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொற்று நடவடிக்கையின்படி, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்ப ட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை. குறைந்தபட்சம் 6அடி சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியமாகும். குறியிடப்பட்ட இடங்க ளில் வரிசையாக நிற்க வேண்டும். மேலும் ஒருவருக் கொருவர் கைகுலுக்குதல் கட்டாயம் தவிர்த்திடல் வேண்டும். முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணிந்து மூக்கு, வாய் நன்கு மூடியிருப்ப தை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். உடல் வெப்ப பரிசோதனை கட்டா யம் மேற்கொள்ள வேண்டு ம்.

உண்டியலை தொடாமல் காணிக்கை செலுத்த வேண்டும். கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் அமர்வது, விழுந்து கும்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பொதுமக்கள் தங்கள் காலணிகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். கோயில்களில் இருக்கும் சிலைகளையோ, ஏனைய பொருட்களையோ தொடு வதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். பக்தர்கள் கூ ட்டமாக கூடுவதை முற்றிலு ம் தவிர்த்தல் வேண்டும். பக்தர்கள் தனி நபரோ அல்ல து குழுவினருடன் சேர்ந்து பஜனையில் ஈடுபடுவதை தவிர்த்திடல் வேண்டும். பக்தர்கள் தேங்காய், பழங் கள் கொண்டு வருவதைத் தவிர்த்தல் வேண்டும். எந்த பிரசாதத்தையும் அர்ச்சகர், பக்தர்களுக்கு நேரடியாக வழங்கக் கூடாது எனத் தெ ரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,Madanagopala Swamy Temple ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி