பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

வெள்ளக்கோவில், டிச.23:ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சின்னியம்பளைத்தை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மனைவி பரமேஸ்வரி (57). இருவரும் பைக்கில் நேற்று முன்தினம் மூலனூரில் உள்ள உறவினர் விட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வெள்ளக்கோவில் கரட்டுப்பாளையம் அருகே வந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்மநபர்கள், ராஜேந்திரனின் பைக்கை வழிமறித்து பரமேஸ்வரியிடம் இருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>