- தேவகோட்டை
- தேவகோட்டை தலைமை தபால் நிலையம்
- காரைக்குடி
- துணைப்பிரிவு ஆய்வாளர்
- ரித்திஷ் சவுகான்
- தலை
- போஸ்ட்
- செல்வராஜ்
- திருப்பத்தூர் சாலை
- தியாகிகள் பூங்கா...
தேவகோட்டை, செப்.23: தேவகோட்டை தலைமை அஞ்சலகம் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி உபகோட்ட ஆய்வாளர் ரித்தீஷ் சவுகான், தேவகோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. அலுவலகத்தில் இருந்து திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை பேரணி நடைபெற்றது.
இதில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த பேரணியில் காரைக்குடி உபகோட்ட அஞ்சலக உதவியாளர் ரமேஷ், தேவகோட்டை அஞ்சலக உபகோட்ட நீல் ஓவர்சியர் உமா மகேஸ்வரி, அஞ்சலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
