×

நான்கு வழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்ட 8 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

கோவில்பட்டி, டிச. 23: கோவில்பட்டியில் நான்கு வழிச்சாலையில் பயணிகளை இறக்கி விட்ட 8 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே நெல்லை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் நான்கு வழிச்சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை 2 மணி முதல் 7.30 மணி வரை கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் நாகூர்கனி, நெடுஞ்சாலை ரோந்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெல்லை மார்க்கமாகச் சென்ற 8ஆம்னி பேருந்துகள் நான்கு வழிச்சாலையில் பயணிகளை இறக்கிய போது சோதனை செய்து தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு அபராதமாக ரூ.15 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர்களுக்கு புதிய பேருந்து நிலையத்தில் தான் பயணிகளை இறக்க வேண்டும். நான்கு வழிச்சாலையில் இறக்க கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்க நெடுஞ்சாலை ரோந்து ஆய்வாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.

Tags : Omni ,passengers ,
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி