குருகாட்டூரில் கிறிஸ்துமஸ் விழா மோகன் சி.லாசரஸ், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு

நாசரேத், டிச. 23: குருகாட்டூரில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மோகன் சி. லாசரஸ், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றனர். நாசரேத் அருகே குருகாட்டூர் கிராமத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்து புத்தாடைகளை வழங்கி கிறிஸ்துமஸ் செய்தி கொடுத்தார். அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்திய மிஷனரி சங்க குருவானவர் கிறிஸ்டியான், சபை ஊழியர் ஞானதுரை, மாவட்ட திமுக அவைத்தலைவர் அருணாச்சலம், முன்னாள் பஞ்.தலைவர் ஜாண், ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர், சிறுமிகளின் நடனங்கள், பப்பட் ஷோ, சிலம்பாட்டம், குறு நாடகங்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் அர்ஜூனா விருது பெற்ற கபடிவீரர் மணத்தி கணேசன், திமுக மாநில மாணவரணி துணைஅமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் நவீன்குமார், ஊராட்சி செயலாளர் பால்சித்தர், கோட்டூர் கோயில், சொக்கலிங்கம், வக்கீல்கள் கிருபாகரன், செல்வம், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>