விபத்துகள் அதிகம் ஏற்படுத்தும் எக்ஸ்ட்ரா பிட்டிங் அகற்றம்

ஊட்டி,டிச.23: விபத்துகள் அதிகம் ஏற்படுத்தும் எக்ஸ்ட்ரா பிட்டிங் எனப்படும் பம்பர்களை அகற்றும் பணியில் ஆர்டிஓ., அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாள் தோறும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடக்கிறது. இது போன்று சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழப்புகள் மற்றும் காயம் ஏற்படுவது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கே. இவர்கள் எதிரே வரும் வாகனங்களின் மீது மோதும் போது, அந்த வாகனங்களில் எக்ஸ்ட்ரா பிட்டிங் எனப்படும் இரும்பு அல்லது ஸ்டீல் கம்பிகளால் ஆன பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், மோதுவதாலேயே விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனை அகற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து, இதனை அகற்ற போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரா பிட்டிங்குகளை அகற்றும் பணிகளில் ஆர்டிஓ., அதிகாரிகள் ஈடுபட்டனர்.

ஊட்டியில் ஆர்டிஓ., தியாகராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் குேலாத்துங்கன் ஆகியோர் தலைமையில் லவ்டேல் சந்திப்பு பகுதியில் குன்னூர் மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த எக்ஸ்ட்ரா பிட்டிங் பொருட்களை அகற்றினர்.

Related Stories:

>