மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் தேவாலயங்கள்

ஊட்டி,டிச.23: நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கிறிஸ்தவ மக்களால் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படும் நிலையில், நேற்று கிறிஸ்துவ மக்கள் பெரும்பாலனோர் புத்தாடைகள், கேக், நட்சத்திரங்கள் ஆகியவைகளை வாங்க ஊட்டி நகரில் குவிந்தனர்.

இதனால், நகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அனைத்து தேவாலயங்களும் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. பெரும்பாலான தேவாலாயங்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் துவங்கின.

பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மக்கள் கேரல்கள் மூலம் வீடு தோறும் சென்று பாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் பழமை வாய்ந்த தேவாலயங்கள் உள்ளன. தற்போது இந்த தேவாலயங்கள் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகே சென்று சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories:

>