மதுரை: தமிழ்நாட்டில் பட்டாசு தொழிலாளர் நலன் காக்க பட்டாசு உற்பத்தி கழகம் அமைத்து தர கோரி வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கிளை இவ்வாறு ஆணையிட்டுள்ளது.
