×

சீர்காழியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

சீர்காழி, டிச. 23: சீர்காழி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கொள்ளிட முக்கூட்டு, ஈசானிய தெரு, தடாளான் கோயில், தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாடுகள் திடீர் திடீரென்று சாலையை கடப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைந்து வருகின்றனர். சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன.

சில சமயங்களில் மாடுகள், காய்கறி பழக்கடைகளில் புகுந்து சேதப்படுத்தி காய்கறி பழங்களை தின்றுவிட்டு செல்கின்றன. மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகள் எங்கே இருக்கிறது என்று கூட தெரிந்து கொள்வதில்லை மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் இதனை பயன்படுத்தி சிலர் மாடுகளை கடத்தி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. அப்போது தான் மாடுகள் காணவில்லை என உரிமையாளர்கள் பல்வேறு இடங்களில் தேடுகின்றனர் மற்ற நேரங்களில் மாடுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. சில மாடுகள் அதிகாலை உரிமையாளர் வீட்டிற்கு சென்று பால் கொடுத்துவிட்டு மீண்டும் சாலைகளில் திரியும் சம்பவமும் நடந்து வருகிறது. மாடுகள் லாரி, கார் பேருந்துகளில் சிக்கி இறந்தும் வருகின்றன.

சில பகுதிகளில் மாடுகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது மாடுகளை பிடித்து அடைக்க ஒவ்வொரு இடத்திலும் பட்டி என்று ஒன்று இருந்தது. இந்த பட்டிகளில் மாடுகளை அடைத்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த பட்டிகள் காணாமல் போய்விட்டது. இதனால் மாடுகளை பிடித்து அடை க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மாடுகளை சாலையில் திரிய விடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sirkazhi ,road ,
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...