×

கொள்ளிடம் அருகே மேல வடிகால் பாலம் மதகு உடைப்பால் சாலை உள்வாங்கியது

கொள்ளிடம், டிச.23: கொள்ளிடம் அருகே மேல வடிகால் பாலம் மதகு உடைப்பால் சாலை உள்வாங்கியது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேலூர் கிராமத்திலிருந்து வடரங்கம் செல்லும் சின்ன சாலை உள்ளது. மாதிரவேலூரில் இந்த சாலையின் அடிப்பகுதியில் மேல வடிகால் வாய்க்கால் சுரங்கப் பாதையாக சென்று கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கலக்கிறது. இந்த சுரங்கப்பாதை மதகு திடீரென உடைப்பு ஏற்பட்டு இரண்டு இடங்களில் உள்வாங்கியுள்ளது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலூர் கிராமத்திலிருந்து பால்ஊரான் படுகை, ஏத்தகுடி, பட்டியமேடு, வாடி, மற்றும் வடரங்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு கார், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் செல்பவர்கள் மாதிரவேலூரிலிருந்து சுற்று வழியாக பூங்குடி, சென்னிய நல்லூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக மேலும் அதிகமாகபத்து கிலோமீட்டர் சுற்று வழிப்பாதையில் சென்று வருகின்றனர். மாதிரவேலூரிலிருந்து சின்ன சாலை வழியாக வடரங்கம் செல்வதற்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. ஆனால் தற்போது வடிகால் மதகு உடைப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுப்பாதையில் பத்து கிலோமீட்டர் தூரம் அதிகமாக சென்று பயணிக்க வேண்டியதாக உள்ளது.

சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாதிர வேலூரில் உள்ள கூட்டுறவு அங்காடியில் இருந்து வாடி கிராமத்திலுள்ள பகுதி நேர அங்காடி கடைக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் தற்பொழுது மேலும் அதிகமாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்களும்,விவசாயிகளும்,பள்ளி மாணவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி உடைந்த வடிகால் பாலத்தை உடனடியாக சரி செய்து சீரான போக்குவரத்தை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,breach ,Kollidam ,drainage bridge ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி