×

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு பொதுமக்கள் பங்கேற்பு

 

மதுரை / சோழவந்தான், செப். 22: புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, மதுரை, சோழவந்தானில் உள்ள வைகை ஆற்றங்கரையில், பொதுமக்கள் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். முன்னோர்களுக்கு ஆடி, தை, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன்படி புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று ஏராளமானோர் மதுரையில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் அதிகாலை முதலே புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

Tags : Purattasi Mahalaya Amavasya ,Madurai ,Cholavandhan ,Vaigai river ,Cholavandhan, Madurai ,Aadi ,Thai ,Purattasi… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா