×

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம் திமுக, மதிமுக, விவசாயிகள் அஞ்சலி

கோவில்பட்டி, டிச. 22: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 36வது நினைவுதினம் கோவில்பட்டியில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி பயணியர் விடுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் பேரணியாக திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் நகரச் செயலாளர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் முருகேசன்,  விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், நகர துணைச்செயலாளர் காளியப்பன், பொருளாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் இந்துமதி, மயில் கர்ணன், மகேந்திரன், வேலுச்சாமி, மாரிச்சாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் விநாயகா ரமேஷ், நகரச்செயலாளர் பால்ராஜ், விவசாய அணி மாநில துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் கார்த்திகேயன், அழகர்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 தமிழ் விவசாயிகள் சங்கத்தலைவர் நாராயணசாமி தலைமையில் மாநில துணைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், நம்பிராஜன், மாவட்டத் தலைவர்கள் வெள்ளத்துரை, நடராஜன், சவுந்திரபாண்டியன், மாநில செயலாளர் சீனிராஜ், தென் மண்டல அமைப்பாளர் சந்திரசேகர், காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டு இயக்க தலைவர் இளங்கீரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் ஈசன், கடலூர் மாவட்ட உழவர் மற்றும் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், ரவி உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதைத்தொடர்ந்து பயணியர் விடுதி முன் அரசியல் கட்சியினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு வந்து வீரமுழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர். திமுக ஆட்சியில் கூடுதல் பஸ்நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ‘‘விவசாயம் என்றாலே மறைந்த முதல்வர் கலைஞர், நாராயணசாமி  நாயுடு பெயரைத்தான் உச்சரிப்பார். கடன் தள்ளுபடிக்காக டெல்லியில்  அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் ஒரு மாதம் போராடியபோதும் மத்திய, மாநில  அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.

குறிப்பாக எடப்பாடி  அரசு கூட டெல்லிக்கு சென்று தமிழக விவசாயிகளை சந்திக்கவில்லை.  அத்துடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அதை எதிர்த்து  இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இதேபோல் 8  வழிச்சாலைக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராடியதையும் எடப்பாடியார் துளி  கூட காதில் வாங்கவில்லை. திமுகவின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி அனைத்து மக்களுக்கு வழங்க வேண்டும். திமுக ஆட்சி அமைந்ததும் கோவில்பட்டி புதிய கூடுதல் பஸ்நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்’’ என்றார்.

Tags : Narayanasamy Naidu Memorial Day ,Kovilpatti DMK ,Farmers Tribute ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...