பாட்டிலால் நண்பர்களை தாக்கிய இருவர் கைது

தூத்துக்குடி, டிச. 22: தூத்துக்குடியில் பீர்பாட்டிலால் நண்பர்களைத் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி  அமுதா நகரை சேர்ந்தவர்  ரஞ்சித்குமார் (28). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த  இசக்கிமுத்து (29), காந்திநகர் மோகன் (38), பிரையன்ட் சதீஷ்மூர்த்தி (26) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் இரவு பேசிக்கொண்டிருந்தபோது இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இசக்கித்து, சதீஷ் மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து மோகன், ரஞ்சித்குமார்  ஆகியோரை பீர்பாட்டிலை உடைத்து தாக்கினராம். இதில் பலத்தகாயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப் பதிந்து தென்பாகம் போலீசார், இசக்கிமுத்து, சதீஷ் மூர்த்தி  ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

Related Stories:

>