பெரணமல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

பெரணமல்லூர், டிச.22: பெரணமல்லூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் உதவி செயற்பொறியாளர் சபாநாயகம் கலந்து கொண்டு ஊராட்சி அளவில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் திட்டப்பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டியும், மகாத்மா காந்தி திட்டப்பணிகளை தரமாக செய்ய அறிவுறுத்தினார். மேலும் ஊராட்சி அளவில் நடைபெறும் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளை ஊராட்சி தலைவர்கள் முன்னிருந்து நடத்தி ஒன்றிய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் ஊராட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories:

More