திருவண்ணாமலை, டிச.22: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது:போளூர் தாலுகா, ஏரிக்குப்பம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. நவகிரகங்களில் ஒன்றான சனி என்று அழைக்கப்படும் சனீஸ்வரன், இத்திருக்கோயிலின் மூலவராக உள்ளது.
சனீஸ்வர பகவானுக்கென பிரத்யே பரிகார தலமாக அமைந்திருப்பதால், சனிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் அதிகம் வருகின்றனர். மேலும், சனி பெயர்ச்சி தினத்தன்று பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதும் வழக்கம்.