×

கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் மூலம் பொதுமக்களை சந்திக்க திட்டம் எம்எல்ஏ பேச்சு

கலசபாக்கம், டிச.22: கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் மூலம் பொதுமக்களை சந்திக்க உள்ளதாக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கூறினார். கலசபாக்கதில் அதிமுக புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது: கலசபாக்கம் தொகுதியில் மக்கள் தரிசனம் மூலம் பொதுமக்களை சந்தித்து இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்படும். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலசபாக்கம் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடவேண்டும்.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை நிர்வாகிகள் இன்றைய தினமே தொடங்கிவிட வேண்டும். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலசபாக்கம் தொகுதி மக்களுக்காகவும், கட்சி நிர்வாகிகளுக்கும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.

இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளும், வரும் சட்டமன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசின் திட்டங்களை முழுமையாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும். எனவே கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜீவா, விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் முருகன், பேரவை ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மலர், பழனி, மாதுரி, இளங்கோ, கூட்டுறவு கடன் சங்க தலைவர் மண்ணு, ஊராட்சி தலைவர்கள் தரணி, பாண்டியன், செல்வராஜ், சண்முகப்பிரியா, கீழ்பாலூர் ஏழுமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் முடிவில் சித்திரசேனன் நன்றி கூறினார்

Tags : MLA ,public ,constituency ,Kalasapakkam ,
× RELATED காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு...