×

ஆரணி ஒன்றியத்தில் ெதாகுப்பு வீடு கட்டி முடித்து பல மாதங்களாகியும் நிதி ஒதுக்கவில்லை கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ஆரணி, டிச.22: ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமை தாங்கினார். பிடிஓ வெங்கடேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பிடிஓ மூர்த்தி வரவேற்றார். கூட்டத்தை ஒன்றிய குழு தலைவர் கனிமொழிசுந்தர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் கட்டி முடித்த வீடுகளுக்கு இதுவரை பணம் வழங்கவில்லை. அதேபோல், தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு கட்டிவரும் பயனாளிகளுக்கு அரசு சிமென்ட், கம்பி கிடைக்காததால் பணிகள் மேற்கொள்ள முடியாமல் பயனாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொகுப்பு வீடு கேட்டு விண்ணப்பித்த பயனாளிகள் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும். எஸ்வி.நகர் ஊராட்சியில் சாலை, கால்வாய் பழுதடைந்துள்ளதால் சாலைகளில் தண்ணீர், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தூர்நாற்றாம் வீசுகிறது. எனவே புதிய கால்வாய், சாலை அமைக்க வேண்டும்.

அதேபோல் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் ஊராட்சியில் ஆரணிலிருந்து கிருஷ்ணாவரம் செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே புதிய தார்சாலை அமைக்க வேண்டும். ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராம சாலை மற்றும் தெருக்களில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. எனவே பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது, பிடிஓக்கள் வெங்டேசன், மூர்த்தி கூறுகையில், `அரசு சார்பில் வரவேண்டிய சிமென்ட், கம்பி வரவில்லை. இதனால் வீடு கட்டும் பயனாளிகளுக்கு சிமென்ட், கம்பிக்கு பதிலாக பணம் வழங்கப்படும். தொகுப்பு வீடு கேட்டு விண்ணப்பித்த பயனாளிகள் விவரங்களை சரிபார்த்து வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்கப்படும். மேலும் பழுதடைந்த தெருவிளக்கு, சாலைகள், கால்வாய்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Councilors ,government ,completion ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை