×

ேபாயம்பாளையம் அருகே நிறம் மாறிய குடிநீர் விநியோகம்

திருப்பூர்,டிச.22: திருப்பூர் போயம்பாளையம் அருகே குடிநீர் நிறம் மாறி வந்ததையடுத்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர், பூலுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சிவப்பு நிறமாக குடிநீர் வருவதாக அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று அந்த பகுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாரதிராஜா மற்றும் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வினர் செய்தனர்.

இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மும்மூர்த்தி நகர் மற்றும் பூலுவப்பட்டி ஆகிய பகுதிகளில் நிறம் மாறி குடிநீர் வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் சாய ஆலைகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கிடையே அந்த பகுதிகளில் 3 பாறைக்குழிகள் மூடப்பட்டுள்ளன. இதில் இருந்து குடிநீர் ஆழ்குழாய் மூலம் மாறி குடிநீர் வந்ததா? எனவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிறம் மாறி வந்த குடிநீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகம்பாளையத்தில் மரம் நடுவதற்கு குழி தோண்டிய போது நிறம் மாறி தண்ணீர் வந்ததாக கிடைத்த புகாரில் அங்கும் ஆய்வு செய்துள்ளோம். விரைவில் பரிசோதனை முடிவுகள் வரும். இதில் சாய ஆலைகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Boyampalayam ,
× RELATED பேன்சி கடையில் செல்போன் திருடியவர் கைது