×

திருப்பூர் அருகே சுவர் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி

திருப்பூர்: அவிநாசி அருகே கட்டுமான பணியின்போது சுவர் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உப்பிலிபாளையம் கொசவம் தோட்டத்தில் கோழிப் பண்ணைக்கு கட்டடம் கட்டும் பணி நடந்துவருகிறது. கட்டுமான பணியின் போது 10 அடி உயர சுவர் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Tiruppur ,Avinashi ,Kosavam Estate ,Uppilipalayam ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...