×

மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி

செய்யூர்: தச்சூர் கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை, எஸ்பி கண்ணன் இயக்கி வைத்தார்.மதுராந்தகம் ஒன்றியத்தில் முன்மாதிரி ஊராட்சியான தச்சூரில் சகாய நகர், எல்.என். புரம், செட்டிமேடு, இருசமநல்லூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் அதிகளவில் கொள்ைள, வழிப்பறி, திருட்டு, விபத்து உள்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரவு நேரங்களில், மர்மநபர்கள் சுற்றி திரிவதால், பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர். இதனால், இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதே நேரத்தில், மேற்கண்ட பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதால், அவர்களுக்கு செல்போன் நெட்வொர்க் சரிவர கிடைப்பதில்லை என கூறப்பட்டது.

இதைதொடர்ந்து மேற்கண்ட பகுதியில், தனியார் அறக்கட்டளை சார்பில், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், மாணவர்களின் படிப்புக்காகவும் சுமார் ₹3 லட்சம் செலவில் பிராட் பேண்ட் வைபை வசதியுடன் கூடிய  35 சிசிடிவி கேமராக்கள், நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன தலைவர் தேவநாதன் தலைமை வகித்தார். செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேமராக்களை  இயக்கி வைத்தார். இதில் சிறு, குறு விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோருக்கு தொண்டு நிறுவனம் சார்பில் விவசாயத்துக்கு தேவையான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags : CCTV ,village ,Thachur ,Madurantakam ,
× RELATED விழுப்புரம் மின்னணு வாக்கு...