×

மாமல்லபுரம் சிற்பங்களை ரசித்த மத்திய வெளியுறவு செயலாளர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் வந்த மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்காஷ் ஸ்வரூப், அங்குள்ள புராதன சிற்பங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டார். மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்காஷ் ஸ்வரூப், அவரது மனைவியுடன் நேற்று மாமல்லபுரம் வந்தார். அப்போது, வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்பட அனைத்து புராதன சிற்பங்களை கண்டு ரசித்தார். அவருக்கு பல்லவர் கால புராதன சிற்பங்கள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கி கூறினர். பின்னர், அவர் புரதான சிற்பங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags : Central ,Foreign Secretary ,Mamallapuram ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து...