×

விருதுநகரில் ஆயிரக்கணக்கான மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டம் மின்வாரிய பணிகள் பாதிப்பு

விருதுநகர், டிச.22: விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக  மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு சார்பில் ஆதிமூலம் தலைமையில் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து களப்பிரிவு பணியாளர்கள், வயர்மேன், போர்மென், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். களப்பிரிவில் காலியாக உள்ள ஹெல்பர், வயர்மேன் உள்ளிட்ட காலியிடங்களை காண்ட்டிராக்ட் முறையில் ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்ய டிச.16ல் அரசு உத்தரவிட்டது. உபமின்நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது. இரு உத்தரவுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட கூட்டுநடவடிக்கை குழு நிர்வாகிகள் கூறுகையில், மின்வாரிய காலியிடங்களுக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரம் கேங்க் மேன்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநியமனம் செய்யவில்லை. 2,900 ஐடிஐ தொழிலாளர்களை பணியமர்த்தவில்லை. 1,300 அசர்களை எடுக்கவில்லை. வேலை பளு ஒப்பந்தத்திற்கு மாறாக அவுட்சேர்ஸ் முறையில் பெரும் காண்டிராக்டர்களுக்காக தன்னிச்சை போக்கில் அறிவுறுத்தி உள்ளனர். உத்தரவுகளை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும். விருதுநகர் மாவட்டத்தில் 67 மின்வாரிய அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. மின்கட்டண வசூல் உள்பட அனைத்து பணிகளும் நடைபெறவில்லை என்றனர்.

Tags : power plant workers ,protest ,power plant ,Virudhunagar ,
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...