×

சிவகாசி தொகுதியில் மினி கிளினிக் திறப்பு

சிவகாசி, டிச. 22:  விருதுநகர் மாவட்டத்தில் 73  முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்குவதற்கு  தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்கிரவார்பட்டி, கங்காகுளம், வேண்டுராயபுரம், பள்ளபட்டி, அய்யனார் காலனி, பெரிய பொட்டல்பட்டி மற்றும் மம்சாபுரம் ஆகிய 7 இடங்களிலும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பரிசோதனை முறை, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி  பெண்களுக்கு வழங்கப்படுகிற ஊட்டச்சத்து இணை உணவுகளை பார்வையிட்டு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ராம்கணேஷ் (சிவகாசி), மரு.பழனிச்சாமி (விருதுநகர்) விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி பலராம் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், தெய்வம் திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் உசிலைசெல்வம், கருப்பசாமி, லீலாவதிசுப்புராஜ், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜய் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ரெங்கபாளையம் காசிராஜன், வேண்டுராயபுரம் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Mini Clinic ,Sivakasi Constituency ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா