×

ராசிபுரம், சேந்தமங்கலத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம்: 20, 21ம் தேதி நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (19ம் தேதி) மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார சுற்றுப்பயணத்தை நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். இன்று (வெள்ளி) மாலை 5 மணிக்கு, ராசிபுரம் பஸ்நிலையம் அருகே எம்ஜிஆர் சிலை அருகில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சேந்தமங்கலம் தொகுதியில் அக்கியம்பட்டியில் அவர் பிரசாரம் செய்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல் மற்றும் பல்வேறு இடங்களில் இன்று முதல் 3நாட்கள் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெற இருந்த பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் பிரசாரம் அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : EDAPPADI PALANISAMI ,RASHIPURAM, ,SENTHAMANGALAM ,NAMAKKAL ,ADAMUGA GENERAL SECRETARY ,NAMAKKAL DISTRICT ,SAVE ,MGR ,Rasipuram ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி