×

ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரியை செலுத்த கூறி அனுப்பிய நோட்டிஸை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரூ.36 கோடி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல. தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் கருத்து தெரிவித்துள்ளது. வரித்தொகையை ரூ.13 கோடியாக குறைத்து திருத்தியமைக்கப்பட்ட நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

Tags : J. Chennai iCourt ,Deeba ,Chennai ,J.J. JAYALITA ,Chennai High Court ,Dipa ,Income Tax Department ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...