×

அரிட்டாபட்டியை அடுத்து கம்பூரிலும் பறவைகள் காணுதல் நிகழ்வு

மேலூர், டிச. 22: மேலூர் பகுதியில் இயற்கை வளம் நிறைந்த 7 மலை குன்றுகள் அமைந்துள்ள அரிட்டாபட்டியில் ஏராளமான பறவைகள் வசித்து வருகின்றன. இந்தியாவில் அரிதாக காணப்படும் பல பறவைகள் இங்கு கூடு கட்டி வசித்து வருகின்றன. இதையறிந்த பறவைகள் ஆர்வலர்கள் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர். தற்போது கொட்டாம்பட்டி அருகே கம்பூர் பகுதியிலும் இதுபோல் அரியவகை பறவைகள் வசிப்பதை அறிந்து பறவை ஆர்வலர்களின் பார்வை அங்கு பதிந்தது. நேற்று கம்பூர் அருகே அலங்கம்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, அய்வத்தாம்பட்டி, சின்னகற்பூரம்பட்டி, தேனங்குடிபட்டி உள்ளிட்ட ஊர்களில் பறவை காணுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள குகைகள் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பறவை ஆர்வலர்கள் அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், விட்டல கோபி ரிஷி ஆகியோர் பல அரிய வகையான பறவைகள் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தினர். பறவைகள் காணும் நிகழ்வு தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கம்பூர் ஊராட்சி இளைஞர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : event ,Kampur ,Aritapatti ,
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...